Vijayalakshmi Seeman: திருமண மோசடி புகார் வாபஸ் பெற்றப்பட்டதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விஜயலட்சுமியை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


சீமான் - விஜயலட்சுமி விவகாரம்:


தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின் சீமான் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டுச் சென்ற விஜயலட்சுமி கடந்த மாதம் மீண்டும் சீமானை விசாரணை செய்யும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.


இந்த புகாரின் பெயரில் வளசரவாக்கம் போலீஸ் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது.  இதையடுத்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி ஆஜரான சீமானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுவிட்டு பெங்களூருவுக்கு சென்றடைந்தார்.


சீமான் மனு:


திருமண மோசடி புகார் வாபஸ் பெற்றப்பட்டதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2011ஆம் ஆண்டு புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்த  நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறினார். இந்த மனு, செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2011 மற்றும் 2023 விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தவிட்டதோடு, 2011ல் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டு நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை  செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


விஜயலட்சுமி ஆஜராக உத்தரவு:


இந்நிலையில்,  இந்த மனு, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011ல் அளித்த புகாரை வாபஸ் பெறப்பட்ட நிலையில், வழக்கை நிலுவையில் வைத்திருந்தது தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்பு, வழக்கின் தன்மை குறித்து ஆராய்வதற்காக நடிகை விஜயலெட்சுமியை  செப்டம்பர் 29ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 'நான் சாகப்போகிறேன்..இதற்கு சீமான் தான் காரணம்’ என்று விஜயலட்சுமி வீடியோ வெளியிட்ட நிலையில், நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.




மேலும் படிக்க 


முதல்வர் கொடுத்த உறுதி! உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!