TTF Vasan: கூண்டுக் கிளியான யூடியூபர் டிடிஎஃப் வாசன்: 2வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது, டி.டி.எஃப் வாசனின் இருசக்க வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது சாலையோர பள்ளத்தில் விழுந்த அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதேநேரம்,  உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது,  கவனக்குறைவாக  செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு, நான்கு நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனா, அவர் அக்டோபர் 4ம் தேதி வரையில் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, டி.டி.எஃப்  வாசனின் வாகன ஓட்டுநர் உரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

வழக்கின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து  பிரபலமானவர்.  அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம்,  டி.டி. எஃப். வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.  இதனிடையே, செல்அம் என்ற இயக்குனர் இயக்கி வரும் மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎqப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் அவர் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் சாகச பயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் அவர் விபத்தில் சிக்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எஃப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

லைசன்ஸ் ரத்தா?

டி.டி.எஃப் வாசனின்  இந்த சாகச பயணங்களும், அதிவேகமாக வாகனம் செலுத்துவதும் பொதுமக்களுக்கு இடையூறாக மட்டுமின்றி, உயிருக்கு ஆபத்தானதாகவும் உள்ளது. எனவே, அவரது வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டும் உரிமத்தை ரத்து செய்ய  தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், விரைவில் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement