ED Raid: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடரும் சோதனை:  


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.  அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தது. கடந்த வாரம் கூட மணல் குவாரி, மணல் கொள்ளை, சட்டவிரோத சுரங்க முறைகேடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். சுமார் 2.33 கோடி ரூபாய் ரொக்க பணமும், ஒரு தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யததாக தகவல் வெளியாகி இருந்தது.  


அடுத்த ரெய்டு:


இந்நிலையில், இன்று காலை முதலே, தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகம் என்பவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.




மேலும் படிக்க 


India- Srilanka-China: ”சீனா கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை, இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு முக்கியம்” - இலங்கை அரசு


Karnataka Strike: “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது” - பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்.. 144 தடை உத்தரவு