தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 


28.11.2022 முதல் 01.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.








கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


கீரனுர் (புதுக்கோட்டை) 6, வீரபாண்டி (தேனீ) 4, பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி (தேனீ) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனீ), கள்ளக்குடி(திருச்சிராப்பள்ளி), சத்தியமங்கலம் (ஈரோடு), படலுர் (பெரம்பலூர்), அதிராம்பட்டிணம் (தஞ்சாவூர்), போடிநாய்க்கனுர் (தேனீ), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2,  செட்டிகுளம் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஓமலூர் (சேலம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), அரிமலம் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), உசிலம்பட்டி  (மதுரை), சிதம்பரம் (கடலூர்), எரையூர் (பெரம்பலூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தாலும், வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை பொழிவு குறைவாகவே இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். 


இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது.


அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரையிலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆக்கிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையிலும் பதிவான மழை அளவு 330 மீ. மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 317 மில்லி மீட்டர் இயல்பை விட 4% அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 


கடந்த இரண்டு வாரங்களின் நிலையை பொறுத்த வரையிலும், குறிப்பாக கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் கடந்த வாரம் அது நான்கு சதவீதமாக குறைந்துள்ளது.


வெப்பநிலை பொறுத்த வரையிலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்பநிலையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பை ஒட்டி இருந்தது.