வேலூர் மாவட்டம் : என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளவர் ராஜசேகர்(39). இவர் நேற்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கடிதத்தில்,"மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள், எனது இந்த முடிவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதான் காரணம் வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்".  




மேலும் ஊராட்சி வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர் ஹரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும். ராஜசேகர் தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பணம் பெற்ற கவுன்சிலர் ஹரி அதை வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து மிரட்டியுள்ளார். இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் ராஜசேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தநிலையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண