Chennai: ஆண் இல்லாத வீடுதான் குறி! நள்ளிரவில் கதவைத்தட்டி பாலியல் வன்கொடுமை! கஞ்சா திருடன் கைது!
ஆண் நபர்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்
Continues below advertisement

சதீஸ்
சென்னை குன்றத்தூர் அருகே கோவூர் பகுதியில் பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் மேல்தளத்தில் தனது அறையில் இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து பார்த்தபோது, ஒரு மர்ம நபர் உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கத்தியைக் காட்டி பணம் நகை கேட்டுள்ளார்.
தன்னிடம் பணம் நகைகள் எதுவும் இல்லை என்று கூறியதும் அந்தப் பெண்ணை கத்திமுனையில் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் குன்றத்தூர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை செய்த போது வீட்டிற்குள் வந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் என்ற தகவலை மட்டுமே தெரிவித்தார்.
இதுக்குறித்து நடத்திய விசாரணையில் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் பிடிக்க குன்றத்தூர் காவல்துறை அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டில் இல்லாததால், காவல்துறை நடத்திய விசாரணையில் சதீஷ் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருப்பதாக தெரியவந்தது.
காவலர்கள் தன்னை கைது செய்ய வருவதை பார்த்ததும் சதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிய முயன்ற பொழுது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து கை மற்றும் கால் முறிந்து. உடனடியாக காவல்துறையினர் போலீசார் அவரை மீட்டு குரோம்பேட் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு குன்றத்தூர் போலீசார் இந்த வழக்கை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி குற்றவாளியே அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் கம்பெனியில் சதீஷ் வேலைக்கு செல்வது வழக்கம் , ஆண் நபர்கள் இல்லாத வீட்டை குறிவைத்து குற்ற சம்பத்தில் சதீஷ் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு பெருங்களத்தூர் பகுதியில 30 நாட்களில் அடுத்தடுத்து 8 வீடுகளில் கொள்ளையடித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.
பெருங்களத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வெளியே வந்தவுடன் மீண்டும் தனது கொள்ளைச் சம்பவம் வேலையை தொடர்வதற்காக திட்டம் தீட்டி உள்ளார் .அதில் ஆண் நபர்கள் இல்லாத வீட்டை தேர்வு செய்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட வீட்டு பெண்ணின் வீட்டில் ஆண் நபர்கள் இல்லாததை, அறிந்து கொண்ட அவர் இரண்டு நாளுக்கு முன்பு கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து பணம்,நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார். தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து, அந்த நபர் அந்த பெண்ணை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.