சென்னை தியாகராய நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்ந்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டமானது பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையின் மிக முக்கிய வர்த்தக இடமான தி.நகரில் பனகல் பூங்கா முதல் அண்ணாசாலை வரை ரூ.39.86 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் அமரும் வகையில் வண்ண இருக்கைகள் என ஒரு வழிப் பாதியாக இந்த சாலை செயல்பட்டு வருகிறது. 




மேலும் தி.நகரில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. மேலும் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்ல ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிறுத்தப்படும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.10ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 வசூலிக்கப்பட்டு வந்தது. 






இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தியாகராய சாலையில் உள்ள வாகன நிறுத்தம் மதிப்பு கூட்டப்பட்ட வாகன நிறுத்த மண்டலமாக (பிரீமியம் பார்க்கிங் மண்டலம் ) மாற்றம் செய்யப்பட்டதால் அந்த சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான வாகன கட்டணத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


அந்த வகையில் நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரூ.60 ஆகவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என வசூலிக்கப்பட்ட கட்டணம் 15 ஆகவும் உயர்த்தப்படவுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சாலையின் ஒரு புறத்தில் வாகனங்கள் நிறுத்தவும், மறுபுறத்தை No Parking ஆக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண