விழுப்புரம்: நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ரவி தன்னுடைய பணியை செய்யாததால் நீட் விலக்கு கோரி மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும், நீட் கோச்சிங் என்ற பெயரில் பல்வேறு சென்டர்கள் லட்சகணக்கில் கொள்ளை அடித்து கொண்டு இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


திமுக சார்பில் தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீட் விலக்கு கோரி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக மருத்துவ அணி, மாணவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம் எல் ஏ புகழேந்தி லட்சுமணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.


உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வு என்பது கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கையெழுத்திடப்பட்டாலும் அதற்கு எதிராக கருணாநிதி போராடியது போல் ஜெயலலிதாவும் எதிர்ப்பு  தெரிவித்து தடுத்து நிறுத்தியதாகவும், ஆனால் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தான் நீட் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், தேர்தல் வாக்குறுதியில்  நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி  வைப்போம் என்று கூறியிருந்தோம். அதனை செய்து உள்ளதாகவும் தமிழ்நாடு மட்டும்  நீட்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது 14 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்த தேர்வு மாநில கல்வி கொள்கைக்கு தலையிடுவதால் தான் தமிழக முதலமைச்சர் கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும் என அறிவித்திருக்கிறார்.த மிழக பாஜக  தலைவர் அண்ணாமலை கோச்சிங் சென்டருக்கு ஆதரவாக இந்த உண்ணாவிரதம் நடைபெறுவதாக தெரிவிக்கிறார். ஆனால் உண்ணாவிரதத்தினால் பாதிக்கப்படபோவது கோச்சிங் சென்டர்கள் தான் அவர்கள் தான் நீட் தேர்வு என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளை அடித்து கொண்டு இருப்பதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். மேலும் ஆளுநர் ரவி தன்னுடைய பணியை செய்யாததால் நீட் விலக்கு கோரி மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.