பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்வின்போது பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உடனிருந்தார்.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பொருளாதாரத்தில் பின்னடைவு அடைந்த மக்களுக்கும் துணையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இருந்து வருகிறது. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிரச்னை நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுபொருளாகவே இருந்து வந்த நிலையில், அதனை பிரதமர் நரேந்திரமோடி தீர்த்து வைத்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதன் மூலம் சமூக நீதி காத்தவராக பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார்.


மண்டல் கமிஷனில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்த்த நிலையில் தற்போது பெயரை நீங்கள் எடுத்துக் கொள்வது சரியா என்ற கேள்விக்கு அத்வானி தலைமையில் நடந்த ரதயாத்திரை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது அல்ல, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மாறுபட்ட கொள்கையை பாஜக கொண்டிருக்கவில்லை.


மேகதாது அணையை கட்டியே தீருவோம், அண்ணாமலையின் உண்ணாவிரதம் குறித்து கவலையில்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்குகாக பாடுபடும் கட்சியாக தமிழக பாஜக உள்ளது, கர்நாடக முதல்வர் என்ற முறையில் அவரது கருத்தை பசவராஜ் பொம்மை சொல்லியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக விசாயிகளுக்காக அவரது கருத்துகளை வலுவாக சொல்கிறார்.  


அண்ணாமலை எதிர்த்து போராட வேண்டியது கர்நாடக பாஜகவை அல்ல; மத்திய பாஜக அரசைதான் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு 


காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வேறு வேறு கருத்தை சொல்லும் நபராக பி.ஆர்.பாண்டியன் உள்ளார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தாலும் கூட தமிழ்நாடு விவசாயிகளின் உரிமையை விட்டுத்தர தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தவே தமிழக பாஜக போராட்டம் நடத்தியது. 



தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்து 85 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்கிறது. 100 நாட்களில் நிறைவேற்றுவதாக கூறி 505 வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறினார். அதனை அவர்கள் செய்யவே இல்லை. காவிரி உரிமைக்காக வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 


மருத்துவ முதுகலை படிப்பிற்கு மத்திய அரசே நேரடி கலந்தாய்வை நடத்துவதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு 


காற்றடித்தால் கூட அதை எதிக்கும் நபராக வைகோ உள்ளார்; வைகோ ஒரு காலத்தில் இருந்த நிலை வேறு; தற்போது இருக்கும் நிலை வேறு