அமெரிக்கக் கடற்படைக் கப்பல் சார்லஸ் ட்ரூ, ஞாயிற்றுக்கிழமை சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் & டூப்ரோவின் கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை மேற்கொள்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. பழுதுபார்ப்புக்காக ஒரு அமெரிக்கக் கப்பல் இந்தியா வருவது இதுவே முதல்முறை.






இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பெரிய ஊக்கம் என பெருமிதம் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், அமெரிக்க கப்பல் இந்தியா வந்திருப்பது இந்திய-அமெரிக்க வியூக ரீதியான கூட்டாண்மைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் முதன்முறையாக அமெரிக்க கடற்படை கப்பலுக்து பழுது பார்க்கப்பட்டுள்ளது. கப்பலின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க கடற்படை ஒப்பந்தம் வழங்கியது.


உலகளாவிய கப்பல் பழுதுபார்க்கும் சந்தையில் இந்திய கப்பல் கட்டும் தளங்களின் திறன்களை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது. இந்திய கப்பல் கட்டும் தளங்கள், மேம்பட்ட கடல்சார் தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தி, பரந்த அளவிலான மற்றும் செலவு குறைந்த கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.


பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார், கடற்படைத் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் கப்பலை வரவேற்க கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்றனர்.


சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜெனரல் ஜூடித் ரவின் மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலர் ரியர் அட்மிரல் மைக்கேல் பேக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


இந்திய கப்பல் கட்டும் தொழில் மற்றும் இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகளுக்கு இது முக்கியத்தும் வாய்ந்த நாள் என அமெரிக்க கப்பல் பழுதுபார்க்கும் பயணத்தை அஜய் குமார் விவரித்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண