CM Stalin: 'கடந்தாண்டை விட தமிழ்நாட்டில் இருந்து அதிக தேர்ச்சி..' யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த ஜீஜீக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த ஜீஜீக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 

“நேற்று வெளியான இந்திய குடிமைப் பணித் தேர்வில் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி (UPSC) தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்தியக் குடிமைப் பயிற்சி மையம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்தியக் குடிமைப் பயிற்சிகள் கடந்த ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது. பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும். அகில இந்தியக் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  இனவாரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் 56 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

19 பேர் தேர்ச்சி:

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு முழுநேரமாக 76 ஆர்வலர்கள் இம்மையத்தில் பயிற்சிப் பெற்றனர். முதன்மைத் தேர்வில் வெற்றிப் பெற்ற ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், முனைப்புடன் ஆளுமைத் தேர்வினை எதிர்கொள்வதற்கும். 02.01.2023, 03.01.2023 ஆகிய நாட்களில்
இப்பயிற்சி மையத்தில், ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஓய்வுபெற்ற / பணியிலிருக்கும் பணி அலுவலர்கள், இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை கவனமுடன் பரிசீலனை செய்கிற உளவியல் நிபுணர்கள் போன்ற வல்லுனர்களை கொண்டுக் கொண்டு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டது.

இம்மாதிரி ஆளுமைத்தேர்வில், 46 ஆர்வலர்கள் முனைப்புடன் பங்கேற்றனர். தற்போது புதுடெல்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில் இப்பயிற்சி மைய ஆர்வலர்களில், 19 ஆர்வலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola