• இனி 5 வயது வரை பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்லலாம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 3 வயது வரை கட்டணமில்லை என இருந்த நிலையில் தற்போது 5 வயது வரை கட்டணமில்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி கட்டணம் என்றும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.   மேலும் படிக்க



  • புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா.. திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என, அக்கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அறிவித்துள்ளார். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில், திமுகவும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள புதிய நாடாளுமன்றம் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.  மேலும் படிக்க



  • சிங்கப்பூரில் முதலீட்டாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!


சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்தாண்டு, தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரும் வகையில் அரசுமுறை பயணமாக, சிங்கப்பூருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் ? 


வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறு பரப்புவதா? பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் 


தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறு பரப்பியதாக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான வெளியான அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் படிக்க