வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   


மடத்துக்குளம் (திருப்பூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு) தலா 3, ஓசூர் (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), உதகை (நீலகிரி) தலா 2, சோத்துப்பாறை (தேனி), தாளவாடி (ஈரோடு), பெரியகுளம் AWS  (தேனி), பெரியார் (தேனி), பெரியகுளம் (தேனி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), நாலுமுக்கு  (திருநெல்வேலி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


26.05.2023 முதல் 28.05.2023 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


27.05.2023 மற்றும் 28.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


பொதுவாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதாவது ஒரு சில மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடக்கத்திலிருந்தே நல்ல மழை பதிவாகி வருகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. ஆனால் வெயிலினால் ஏற்படும் உஷ்னம் அதிகமாக உணரப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.