TN Governor Ravi: சென்னையில் நடைபெற்ற அர்ஜன சேவா சங்கத்தின் 90வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, "தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் தீண்டாமைக் குற்றங்கள் நிலவுகிறது. தீண்டாமை தொடர்ந்து நிலவக் காரணமே, பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின்றனர். இதுவே பட்டியலின மக்களுக்கு எதிராக தீண்டாமைக் குற்றங்கள் நிலவ முக்கிய காரணமாக உள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிராக தீண்டாமைக் குற்றங்களைச் செய்பவர்கள்"  என அவர் பேசியுள்ளார்.

  


 அர்ஜன சேவா சங்கத்தின் 90வது ஆண்டு விழாவோடு சென்னை  சேத்துப்பேட்டில் சர்வோதயா மாணவிகள் பெண்கள் விடுதியை  (மேற்குத் தொகுதி) திறந்து வைக்கும் நிகழ்வும் நடந்தது. விடுதியை திறந்து வைத்த ஆளுநர் தொடர்ந்து பேசுகையில், "பிரிட்டிஷார் நாட்டைப் பல்வேறாக பிரித்தனர். ஆனால் நமது நாட்டின் தந்தை காந்தி நமது நாட்டை ஒரே குடும்பமாக பார்த்தார்.  அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததைப் போலவே தீண்டாமையையும் எதிர்த்தார். அதேபோல் தீண்டாமை என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் அநீதி என்றார். காந்தி  உருவாக்கிய அர்ஜன சேவை சங்கத்தை பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை சமூக ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் உயர்த்தவே உருவாக்கினார்.


காந்தியின் மாடலில் இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமங்களில் இருந்து தொடாங்குகிறது” என்றார். 


மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சியை பாராட்டி பேசினார், தமிழகத்தின் ஒட்டுமொத்த சாதனைகளைப் பாராட்டும் போது சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை ஆகியவை மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 “தமிழகத்தின் படிப்பறிவு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோல், ஆனால் மாநிலத்தில் 24% அளவில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் துன்பத்தினை அரசு மறைக்கிறது. தீண்டாமை, சமூக பாகுபாடு, குற்றவியல் நீதி அமைப்பு கூட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வையோ நியாயத்தையோ வழங்குவதில்லை. மேலும், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பட்டியலின  மற்றும் பழங்குடி பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் மட்டும் 25% வழக்குகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் மட்டும் 14 சதவீதம்” என அவர் கூறியுள்ளார்.  இந்த சோகமான யதார்தத்தில் இருந்து பட்டியலின மற்றும் பழங்குடி மக்களை மீட்க அவர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் காந்தியின் கனவினை நாம் நிறைவேற்ற முடியும் இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார். 


இந்நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி அவரது மனைவி லஷ்மி ரவியுடன் கலந்து கொண்டார். 




பழைய இரும்புக் கழிவுகள் ஏலம்... ரூ.2500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்திய ரயில்வே!