திமுக கழகத்தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் "உங்களில் ஒருவன் பதில்கள்” குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலினின் பதில்கள்:
கேள்வி: ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் சட்டமன்ற தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே..?
பதில்கள்: உண்மைதான்! இந்தியாவிற்கு முழுமையானதுதான் தமிழ்நாட்டின் குரல். சமூக நீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகர். அதேபோல மாநில சுயாட்சிக்கும் தமிழ்நாடுதான் தலைநகர். அந்த அடிப்படையில், இது மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றினோம். கோடிக்கணக்கான பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்புகின்ற மசோதாக்களை நியமன ஆளுநர்கள் கிடப்பில் போடுகிறார். அதைவிட மக்களாட்சி மாண்புக்கு மிகப்பெரிய இழுக்கு இருக்க முடியாது. அதனால்தான் சட்டமன்ற மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என சொல்றோம். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக எனது குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக ஆதரவு தந்த மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி.. மற்ற மாநில முதலமைச்சர்களும் இதற்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்விகள்: ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. திரும்பி பார்க்கையில் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது? எதிலெல்லாம் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என நினைக்கிறீர்கள்..?
பதில்கள்: ரொம்ப மனநிறைவோடு இருக்கிறேன். 5 ஆண்டு கால ஆட்சியில் 2 ஆண்டுகள் என்பது பாதி கூட இல்லை. ஆனால், இரண்டே ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்கிற்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். சொன்னதை மட்டும் அல்ல.. சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியது ஒட்டுமொத்த இந்தியாவில் இப்போது இருக்கும் திமுக அரசாகதான் இருக்க முடியும். பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை ஓரளவு மீட்டுள்ளோம். இன்னும் சரி செய்ய வேண்டியது நிறைய இருக்கு.
கேள்விகள்: பாஜக் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?
பதில்கள்: சிறுபான்மை சமூகத்தினர் மீதுள்ள வன்மம்தான் இதன் மூலமாக வெளிபடுகிறது. தேர்தல் அரசியல் லாபத்திற்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திபடுத்தும் என பாஜக அரசு அவர்களாகவே கற்பனை செய்கிறார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை. பாஜகவிற்கு வாக்கு அளிக்காத பெரும்பாலான மக்களும் இந்துக்கள்தான். அவங்க அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்ற மக்கள். பாஜக தங்களது வெறுப்புணர்ச்சியை திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என காட்ட நினைக்கிறது. அதுக்கு பாஜக ஆதரவு ஊடகங்களும் துணை நிற்கிறது. பாஜகவின் ஊது குழலாக மாறி, ஜனநாயகத்தின் 4வது தூண் என்பதை மறந்து பாஜகவை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படியான சில காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பாஜக செஞ்சுட்டு இருக்கு. மதசார்பின்மையை அரசியலைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்ற செயல். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க.