ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள ஜவுளி நகரில் கட்டடம் இடிந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாசலபதி என்பவரது வீட்டின் மாடியில் பூச்சு வேலை செய்து கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதில் நாகேந்திரன் என்பவர் உயிரிழந்த நிலையில் சிவராஜ் மற்றும் ஆனந்த என்பவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தொடரும் கட்டட விபத்துகள்:


சமீபகாலமாக, கட்டட விபத்துகள் அதிகரித்து வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர்; ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல் பணிகளும் நிறுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 


இதேபோல, வேளச்சேரியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 8 பேர் சிக்கியிருப்பத்தாக கூறப்பட்டது.


கட்டட விபத்துகளுக்கு காரணம் என்ன?


மதுரையில் 20வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1வது தெரு பகுதியில் ரெட்டியப்பட்டியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த போது மாடிக்கு செல்வதற்கான படி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது.  அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கினர்.


அப்போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மூக்காயி என்ற 52 வயது பெண் தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். மேலும் பணியில் ஈடுபட்டுவந்த நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த தொண்டிச்சாமி, கட்டையன் - 46, ஜோதி -52 ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.                                                            


மேலும் படிக்க: 790 ஆண்டுகள் பழமையானக் கிணறு மங்கலச் சொற்களுடன் கல்வெட்டு! வரலாறு இதுதான்!