சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா நேற்று காலை காலமானார். இதையடுத்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க : Snake in Shoe : ஷூவுக்குள் ஒளிந்திருக்கும்னு பாடணுமா? பதறவைத்த பாம்பு.. வார்னிங் கொடுத்த வனத்துறை..
காமெடி நடிகர் கவுண்டமணி, நடிகர் சிம்பு, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி என பலரும் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தநிலையில், எதிர் எதிர் துருவங்களான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஐசரி கணேஷ் வீட்டில் நேருக்கு நேர் சந்தித்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முதலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, அங்கு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்துள்ளார். இருவரும் அஞ்சலி செலுத்தியபின், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டுள்ளனர். அப்பொழுது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலில் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.
அப்பொழுது, உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை, அப்பா எப்படி இருக்காங்க? நல்ல ஆரோக்கியமாக இருக்காங்களா? என கேட்டார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், அப்பா நலமாக இருப்பதாக பதில் அளித்தார். இதன் பின்பு அண்ணாமலை, 'பூரண குணமடைந்து அவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும்' எனக்கூறினார்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலையிடம் உயதநிதி ஸ்டாலின், 'நீங்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டீர்களா?' என கேட்க அதற்கு அண்ணாமலை 'ஆம்' என பதில் அளித்தார்.
இதன்பின்னர் அவர்கள், ஐசரி கணேசுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சந்திப்பின்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களது சந்திப்பு அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்