தாய்லாந்தில் 01.12.2023 முதல் 09.12.2023 வரை நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் (IWAS– THAILAND) தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளவுள்ள 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு போட்டி நுழைவுக் கட்டணம், விமானக்கட்டணம், உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான செலவினத் தொகைக்காக "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" நிதியிலிருந்து ரூ.38.40 இலட்சத்திற்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் இன்று (17.11.2023) சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சீனாவில் 18.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெற்ற 19-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் ஆகுறன்வசந்த் அவர்களுக்கு ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினையும், உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் 23.03.2023 முதல் 26.03.2023 வரை நடைபெற்ற 5-வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ மற்றும் சிவராஜன் சோலைமலை, வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ருத்திக் ரகுபதி, சந்தியா விஷ்வநாதன் மற்றும் நவீன் சிவகுமார், வெண்கலப் பதக்கங்கள் வென்ற நீரஜ்குமார் சீனிவாசன். எம்.எஸ்.சுதர்சன் மற்றும் டி. பிரித்விராஜ் ஆகிய வீரர். 8 வீராங்கனைகளுக்கு "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தலா ரூ.2.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.16 இலட்சத்திற்கான காசோலைகளையும் ஊக்கத்தொகையாக வழங்கினார்.


மேலும், ஆஸ்திரேலியா, மெல்போர்னில் 02.11.2023 முதல் 12.11.2023 வரை நடைபெற்ற ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாடு செரிப்ரல்பால்சி வீரர்களான பாண்டியராஜன் மற்றும் ஜோஷ்வா ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு போட்டி நுழைவுக் கட்டணம், விமானக் கட்டணம். உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் ஆகியவற்றுக்கான செலவினத் தொகைக்காக "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" நிதியிலிருந்து தலா ரூ.1.89 இலட்சத்திற்கான காசோலைகளை உதவித்தொகையாக வழங்கினார்.


இதுவரை, தமிழ்நாடு முதலமைச்சரின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.5 இலட்சம் உட்பட மொத்தம் 70 தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகள் மூலம் நன்கொடையாக பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.21.06 கோடி நிதி "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து இந்நிதியிலிருந்து தமிழ்நாட்டைச் தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 228 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, உதவித் தொகையாகவும், ஊக்கத்தொகையாகவும் ரூ.4.64 கோடி நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது