தேமுதிக தலைவரும்  நடிகர் சங்க முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தொண்டை வலி மற்றும்  உடல்நல குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.