திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.
துறைகள்:
அதன்படி முதல்வரின் முதல் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பொது நிர்வாகம், உள்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தொழில் துறை, சிறப்பு திட்டங்கள் செயல்பாடு, தொழில்நுட்பத்துறை, திட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை போன்ற முக்கிய துறைகள் சார்ந்த பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, தற்போது கூடுதலாக மேலும் 3 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1.சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம் மற்றும் வனம்,
2.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாடு,
3.சுற்றுலா - கலாச்சாரம்
முதலமைச்சரின் இரண்டாவது தனி செயலாளராகவுள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதலாக 4 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1.பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் சிறுபான்மையினர் நலன்
2. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்
3. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
4. சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம்
முதலமைச்சரின் மூன்றாவது செயலாளராகவுள்ள எம்.எஸ்.சண்முகத்துக்கு கூடுதலாக 5 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1.கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
2.கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளித்துறை, காதி
3.சமூக சீர்திருத்தம்
4.மாற்று திறனாளிகள் நலன் மேம்பாடு
5. முதல்வரின் நேர முன்பதிவு (அரசியல் அல்லாத), சுற்றுலா ஏற்பாடு, அரசாங்க புரோட்டோகால் ( protocol )