தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானதும், மூன்றாவது படைவீடானதும் பழனி ஆகும். பழனி மலை முருகனை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் விழா நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.


மலை உச்சியில் வீற்றிருக்கும் பழனியாண்டவரை பார்ப்பதற்காக அடிவாரத்தில் இருந்து மக்கள் படிக்கட்டுகள் வழியாக சிரமங்களை கடந்து சென்று வருகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ரோப்கார் வசதி செய்யப்பட்டுள்ளது.


இந்த ரோப்கார்கள் பராமரிப்பிற்காக மாதாந்திர பராமரிப்பு சேவையும், வருடாந்திர சேவையும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால், பராமரிப்பு பணிகள் சமயத்தில் ரோப்கார் சேவைகள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான ரோப்கார் பராமரிப்பு பணிகள் இன்று பழனியில் நடைபெற உள்ளது. இதன்காரணமாக ரோப்கார் சேவைகள் இன்று பழனியில் நிறுத்தப்பட்டுள்ளது.


எனவே, பக்தர்கள்  மின் இழுவை ரயில் அல்லது படிக்கட்டுகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.