பறவைகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் இருவர், ராமேஸ்வரத்தில் உள்ள அந்தோணியார்புரம் கடற்கரையில் ‘லைட் மாண்ட்ல்ட் ஆல்பட்ராஸ்’ (light-mantled albatross)எனும் அண்டார்டிகா கண்டத்தை (Antartica) சார்ந்த பறவையை ஆகஸ்ட் 8, 2020 ஆம் ஆண்டு கண்டுள்ளனர்.


வெளியூர் பறவைகளை காண ஒருமுறையாவது வேடந்தாங்கல் சென்று இருப்போம் அல்லது  ஏதோ ஒரு இடத்தில் அரிதான பறவைகளை பார்த்திருப்போம். பெரும் பாலும் பறவைகள் இனபெருக்கத்திற்காகவும், உணவிற்காகவும் அது தங்கியிருக்கும் இடத்தை விட்டு பலாயிரம் கிமீ செல்லும். இரத்ததை உரைய வைக்கும் பணியில் இருந்து தப்பிக்கவும் பறவைகள் இடம்பெயரும். இதை தமிழில் வலசை போதல் (Migration) என குறிப்பிடுவார்கள்.


வலசை போதல் தொடர்பாக, கட்டுரை எழுதிய அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்சார் உயிரியல் பிரிவை சார்ந்த பைஜூ மற்றும் மதுரையில் உள்ள இறகுகள் அமிர்தா ட்ரஸ்டை சார்ந்த ரவீந்திரன் ஆகியோர், இந்த பெரிய பறவை எப்படி இவ்வளவு தூரம் பயணித்து இருக்கும் என்பதை நினைக்கும் போது வியப்பாக உள்ளது என கூறினர்.


இதை பற்றிய தகவல் “ஜர்னல் ஒஃப் திரடெண்ட் டாக்ஸ’ (Journal of Threatened Taxa) எனும் இதழில் வெளியாகிவுள்ளது. இப்பறவையானது அழிந்து வரும் உயரினங்களின் பட்டியலில் உள்ளது. இதுவரை  தென்னாசிய அல்லது அதை சுற்றியுள்ள இடங்களில் யாரும் இந்த பறவையை கண்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.


ரவீந்திரனும் சுற்றுவட்டாரத்தில் இருந்த மீனவர்களும் இப்பறவையை கண்ட போது , அதனால் பறக்க கூட முடியவில்லையாம். வனதுறையினர் மற்றும் அங்குள்ள மீனவர்கள் தான் அப்பறவைக்கு ஆகாரம், நீர் கொடுத்து அதை காப்பாற்றி  வானில் பறக்கவிட்டுள்ளனர்.




 


இறகுகள் அமிர்தா ட்ரஸ்டை சார்ந்த ரவீந்திரன் கூறியதாவது, “ நாங்கள் இப்பறவையை பார்க்கும் பொது ஆச்சரியத்தில் திளைத்தோம் , அண்டார்டிகா கண்டத்தில் வாழும் இப்பறவை இங்கு கண்டது மிக  அரிதான நிகழ்வு.  நன்றாக வளர்ச்சியடைந்த இப்பறவை மன்னார் வளைகுடாவிற்கு (Gulf of Mannar) வந்துள்ளது. பெரும்பாலும் இந்த பறவைகள் கூடு  கட்டும் இடத்திலிருந்து  சுமார் 7000 முதல் 8000 கிமீ தொலைவு கடந்து ராமேஸ்வரம் அடைந்துள்ளது.


இந்த பறவைகள், தெற்கு பகுதியில் உள்ள கடல் பரப்பில் காணப்படும். அண்டார்டிகா பகுதியை சுற்றியுள்ள தீவுகளில் இது  இனப்பெருக்கம் செய்யும். இதை குறித்து இருவரும் பெரிய ஆரய்ச்சியில் ஈடுபட்டனர். ஏதாவது புயல் ஏற்பட்டிருந்தால் இப்பறவை இங்கு வந்து இருக்கலாம் ஆனால் நாங்கள் செய்த ஆய்வில், எந்தவொரு புயலும் காணப்படவில்லை. அதனால் எங்கள் ஆய்வை, சர்வதேச சக மதிப்பாய்விற்கு அனுப்பினோம். அவர்களும் எங்களின் ஆய்வை உண்மை என அறிவித்துள்ளனர் என பைஜூ கூறினார்.


பறவைகளுக்கும் காற்றழுத்தங்களுக்கும் எந்தவொரு  சம்மந்தமும் இல்லை, காற்றின் அலைகள் மூலம் இப்பறவை வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால், இதை அவர்கள் இருவரும் காணும்போது  எந்த புயலும் ஏற்படவில்லை என ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஜுன் மாதத்தில், ஆர்டிக் ச்குவா எனும் பறவையை மூன்றாவது முறையாக தனுஷ்கோடியில் பார்த்துள்ளனர்.