TN Rains: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

tn weatherதமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

tn weather report: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 

Continues below advertisement

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இன்று, லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் இன்று கன மழை: 

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல்,கிருஷ்ணகிரி, சேலம்,தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 நாட்களுக்கு நீடிக்கும் கனமழை:

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement