திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில், மலைவாழ் மக்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மரம் வெட்டுதல், கூலி வேலைக்கு செல்வது, ஆடு மேய்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை செய்து வாழ்கையை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பெரிதும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்றல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக பாடங்கள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தனர். தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாததால் பல மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் சூழலலிற்கு தள்ளப்பட்டன.
பாதிரி கிராமத்தை சேர்ந்த செல்வி என்ற பள்ளி மாணவி , கூலித்தொழிலாளியான தந்தைக்கு உதவியாக ஆடு மேய்த்து வருகிறார்.
"இது தொடர்பாக அந்த பள்ளி மாணவி செல்வி கூறுகையில்", '
நாங்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் கிராமத்தில் நாங்கள் 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம், எங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் அதிக அளவில் படிக்காமல் வீட்டின் வறுமையை போக்க கூலி வேலைக்கு செல்கின்றனர். தற்போது நாங்கள் தான் எங்கள் பகுதியில் உள்ள பெண் பிள்ளைகளில் அதிக அளவில் படித்து வருகிறோம்.
நான் 9ம் வகுப்பு படித்து வந்தேன். திடிரென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டன. இனால் நாங்கள் பள்ளிற்கு செல்லாமல் இருந்தோம் வீட்டில் இருந்த படியே பாடங்கள் படித்து தேர்வுக்கு தயாராகி வந்தோம். திடீரென தமிழக அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிக்கப்பட்டனர். 9வகுப்பு முடித்து விட்டு 10 வகுப்பிற்கு சென்றேன். அப்போது மூன்று மாதங்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தினர். கொரோனா 2- வது அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன்மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
ஆனால் எங்கள் குடும்பத்தில் போதிய வசதி இல்லாததால் எங்களால் செல்போன் வாங்கி ஆன்லைன் வகுப்பில் இணைந்து படிக்க முடியவில்லை. இதனால் எங்களால் படிக்கமுடியவில்லை, இந்த ஆண்டும் படிக்காமலே தேர்ச்சி அடைந்தோம்.இதனால் எங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பேனா பிடித்து எழுத வேண்டிய கைகளில் கால்நடைகளை மேய்த்து வருகிறோம்.
பள்ளிக்கு செல்லாமலும் படிக்காமலும் தேர்ச்சி அடைந்தோம், மேலும் எங்கள் ஊரில் உள்ள சிறு பிள்ளைகள் பள்ளிகள் திறக்காத நிலையில் பாடம் பயில முடியாமல், கல்வியை பெற முடியாமல் அவர்களுக்கு தங்களுடைய பெயரைக் கூட எழுத தெரியவில்லை. மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை மறக்கக் கூடிய மோசமான நிலையில் உள்ளனர். இதனால் இளம் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது என மன மனவேதனையுடன் தெரிவித்தார். இதனால் அரசு உடனடியாக பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்