தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தனர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகி தமிழரசன் தலைமையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து தங்களை பாமகவின் இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிய தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிலைபாடுகள் செயல்கள் பிடிக்காததால் கட்சியிலிருந்து விலகி பாமகால் இணைந்ததாக தெரிவித்தார்.


மேலும் அந்த இளைஞர்கள் நாளை நடைபெறும்  மாநாட்டிற்காக நெய்வேலி சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாமகவில் இணைந்த பின்னர் அப்பகுதியில் வைக்கபட்ட தமிழக வெற்றிக் கழக பேனர்களை அகற்றியுள்ளனர். தமிழக வெற்றிக் கழக மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம்


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நாளை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து பணிகளும் முடிவு பெற்றது.


நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.


தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துள்ளனர். 


இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகி தமிழரசன் தலைமையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து தங்களை பாமகவின் இணைத்துக் கொண்டனர். 


தமிழக வெற்றிக் கழக மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.