கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது 39 உயிரிழந்த சோக சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் கடையடைப்பு என கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  அறிவித்துள்ளது. 

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசல் - 39 பேர் பலி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இரவோடு இரவாக கரூர் விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது மாநில வரலாற்றில், ஒரு அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்ததில்லை, எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் ஒருபோதும் நடக்கக்கூடாது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்” என்றும் பதிலளித்தார்.

Continues below advertisement

கடை அடைப்பு:

கரூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் பரப்புரை வேலுசாமிபுரத்தில் நடைபெற்றதுபரப்பரை மேற்கொண்ட போது அங்கு குழுமியிருந்த மக்கள் அதிக கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சுமார் 39 நபர்கள்  மரணம் அடைந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.   இச்செய்தி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது.இந்த துயரச்சம்பவதிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்மேலும் மருத்துவமனையில் உள்ளவர் உடல் நலம் பெற பிரார்த்தித்துக் கொள்கிறோம்

28.9.2025 ஞாயிற்றுக்கிழமை அனைத்து வணிக நிறுவனங்களும் முழு கடையடைப்பு நடத்தி நமது இரங்கலை தெரிவிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது  அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என K ராஜூ Bsc BL, தலைவர்Lion KS வெங்கட்ராமன்  செயலாளரும்  கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  தெரிவித்துள்ளது.