கரூரில் விஜய் பரப்புரை ;

Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக் கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே , பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர் , கூட்டம் கலைந்து செல்லும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி, 2-வது கட்டமாக ஒரு பெண் , 3 குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Continues below advertisement

கவலைக்கிடம் - உயிரிழப்பு

தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். கரூரில் நிலவு வரும் அசாதாரண சூழல் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல்  பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த நிலையில் இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ; 

கரூரில் நடைபெற்றது மிகவும் துயரத்தக்கமான விஷயம். தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 12, 16 பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என பத்து குழந்தைகள் இறந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜி , இரண்டு டிஐஜிக்கல் 10 எஸ்.பி.க்.கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமா வந்ததை மனதில் வைத்துக் கொண்டு தான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.

இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.

முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40 - க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை.

கூட்டம் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் அவர்களே காவல் துறையை பாராட்டினார். கத்தி தொண்டர்கள் முறையாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நாம் முன்னரே அவர்களுக்கு நிபந்தனை விதிக்கிறோம்.

ஆனால் 27 ஆயிரம் கூட்டத்திற்கு எதிர்பார்த்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. இந்த துயரமான சம்பவம் எதனால் நடந்தது என்பது விசாரணை கூறியது அதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி தற்போது பேச முடியாது.

காவல்துறை குறைபாடா என்ற கேள்விக்கு ?

இப்போதைக்கு அது குறித்து பதில் அளிக்க முடியாது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகளை , முழுமையாக கேட்பதற்கு முன்னதாகவே பாதியில் எழுந்து சென்றார்.