கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இப்போது கரூரில் தொடங்கப்பட்டுள்ளது.


 


 




கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் லோட்டஸ் கண் மருத்துவமனை உயர்தர கண் சிகிச்சையை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அளித்து வருகிறது. சிறப்புவாய்ந்த முன்னணி கண் மருத்துவமனையாக திகழும் லோட்டஸ் கண் மருத்துவமனையை மறைந்த டாக்டர் எஸ்.கே சுந்தரமூர்த்தி நிறுவினார். இங்கு கண் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்தோர் அடங்கிய நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் உள்ளனர். மருத்துவனையில் இதுவரை பல்வேறு வகையான கண் நோய் பாதித்த 7 லட்சம் பேருக்கு சிகிச்சையும், 1,00,000 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு வந்து பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து, ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நம்பிக்கையையும் நல் ஆதரவையும் பெற்றுள்ளது. 


 


 




தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் லோட்டஸ் கண் மருத்துவமனை கிளைகள்


தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கண் சிகிச்சை மையங்களை லோட்டஸ் கண் மருத்துவமனை கிளைகளை இயக்கி வருகிறது. கோவையில், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. மேலும், திருப்பூர், சேலம், மேட்டுப்பாளையம், கொச்சின் மற்றும் மூலந்துருத்தி ஆகிய இடங்களிலும் கிளைகளை கொண்டுள்ளது. லோட்டஸ் கண் மருத்துவனை, கரூரில் தனது கிளையை, செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் துவக்கியுள்ளது. அனுபவமிக்க டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், அதிநவீன புதிய இயந்திரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையின் துவக்க விழா, 2024 ஜூன் 12 புதன் கிழமை நடந்தது. அட்லஸ் நிறுவனங்களின் குழுமத்தலைவரும் கரூர் டெக்ஸ்டைல்ஸ் பார்க் தலைவருமான அட்லஸ்  எம்.நாச்சிமுத்து தலைமை விருந்தினராக பங்கேற்று அதிநவீன லோட்டஸ் கண் மருத்துவனையை பாராட்டி பேசினார்.


 




கௌரவ விருந்தினராக முன்னாள் சிபிஐ இயக்குனரும் லோட்டஸ் கண் மருத்துவமனையின் இண்டிபெண்டன்ட் இயக்குனருமான டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி இந்த நான்கு ஆண்டுகளிலேயே மருத்துவமனையை சிறப்பான முறையில் கொண்டு வந்துள்ளார். அவருடைய தந்தை சுந்தரமூர்த்தியின் கனவான இம் மருத்துவமனையை தமிழ்நாடு முழுவதும் துவக்கி சிறந்த சேவை அளிக்க வேண்டும் என்பதாகும். உலகத் தரமான சிகிச்சை கரூரில் அளிக்கப்படும். தரமான சிகிச்சை குறைந்த செலவில் இங்கு வழங்கப்படும். இந்திய நாட்டில் லாபம் இல்லாமல் வேலை செய்யும் ஒரே நபர் விவசாயி தான். கரூரைச் சுற்றி நிறைய விவசாயிகள் உள்ளார்கள் அவர்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை இங்கு அளிக்கப்படும்.


 




கரூரில் பார்க்கிங் வசதி அதிக இடங்களில் இல்லை இது ஒரு பெரும் குறையாக உள்ளது. மிக விரைவில் பார்க்கிங் வசதியுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் கண்களை பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு கீரை, கேரட் போன்ற வகைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இது நமது பாரத பிரதமரின் கனவு திட்டமாகும்.


 




போதை பொருட்களின் ஆபத்தை விட டிவி, மொபைல் மிகவும் ஆபத்தானது. குழந்தைகள் டிவி பார்ப்பதையும் மொபைல் போன் பார்ப்பதையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களின் கண்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். தமிழகம் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களுக்கு அதிநவீன சிகிச்சையை அளித்து வரும் லோட்டஸ் கண் மருத்துவமனை தற்போது கரூரில் துவக்கப்பட்டுள்ளது. இது கரூர் மக்களின் கண் சிகிச்சை தேவையை பூர்த்தி செய்யும். இங்கு தரமான சேவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். கண் மருத்துவ சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.


 




மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி பேசுகையில், “ அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூர் நாட்டின் நெசவு தொழிலில் தலைநகரமாக நிகழ்கிறது. மேலும் ஆடைகள் உற்பத்திகளும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதிலும் கரூர் முதன்மையாக நிகழ்கிறது. மேலும் விவசாயத்திலும் குறிப்பாக நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை உற்பத்தியில்  முதன்மையாக நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கரூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகவேகமான வளர்ச்சியடைந்து வருவதை காண்கிறோம். எனவே, இப்பகுதியில் உயர் தரம் வாய்ந்த கண் நல மருத்துவமனை அவசியமாகிறது. இந்த வகையில், இம்மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கண்புரை மற்றும் கருவிழி அறுவை சிகிச்சைகள், லாசிக் ரெப்ராக்டிவ் அறுவை சிகிச்சைகள்,  கண் விழித்திரை பிரச்னைகள், சர்க்கரை நோயால் வரும் விழித்திரை பிரச்னைகள், விழி வெண்படலம், மாறுகண் பார்வை மற்றும் குழந்தைகளுக்கான கண் மருத்துவ சிகிச்சை போன்றவைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும்,” என்றார்.


 


 





லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் கூறுகையில், “ லோட்டஸ் கண் மருத்துவமனை, சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதையும், மனிநோயத்தோடு சிகிச்சை அளிப்பதையும் தனது கலாச்சாரமாக கொண்டுள்ளது. நோயாளிகளின் முழு திருப்தியையும் உறுதிப்படுத்துகிறது. அனைத்து லோட்டஸ் கண் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் வகையில் பயிற்சி பெற்றுள்ளனர்,” என்றார்.


கரூரை சேர்ந்த பல முக்கிய பிரமுர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சிறப்புமிக்க தருணத்தில், கரூர் கிளை மருத்துவமனையில் வரும் 2024 ஆகஸ்ட் 12 வரை இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் அறிய  89259 42753 / 74485 14851 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.