சபாஷ் போட வைத்த காஞ்சி கலெக்டரின் செயல்.. களத்தில் இறங்கி செய்த சம்பவம் என்ன?


சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரம்பேடு பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஓட்டுனர் தனுஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். குடியிருப்பில் கழிவு நீரை அகற்றும் லாரிகள் அவற்றை சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்ற வேண்டும் என விதிமுறை இருந்தும் நீர் நிலைகள், பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றி கழிவு நீர் அகற்றும் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் அடாவடியில் ஈடுப்பட்டு வரும் நிலையில், பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றிய டேங்கர் லாரியை மாவட்ட கலெக்டர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.


Salem Accident: சேலம் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சோகம் - விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் கைது


சேலம் சுக்கம்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்த போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் லாரியின் பின்னால் நின்றுள்ளனர். அப்போது ஆச்சா குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்திற்கும் பின்னால் மோதியது.


இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுக்கம்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவரை வீராணம் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்தை அதிவேகமாக இயக்கி வந்ததால் வேகத்தடையில் பேருந்தை நிறுத்த முடியாமல் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!


காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஶ்ரீ ஆதி காமாட்சி அம்மன் என்னும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கின. இதனை தொடர்ந்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க்குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - பாமகவின் ஆலோசனை கூட்டம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது தொடர்பான மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள பாமக போட்டியிடுவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


திமுகவில் குறிவைத்து ஓரங்கட்டப்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்? காரணம் என்ன?


அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சொந்த மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை.நாடாளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாததே இதற்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் மஸ்தான் குடும்பத்தினரின் அரசியல் தலையீடு காரணமாகவே, திமுக தலைமை அவரை திட்டமிட்டு ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.