தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது குற்றாலம். ஆண்டுதோறு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் குற்றால சீசன் தொடங்கும். இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். உற்சாகத்துடன் மக்கள் குற்றாளத்தில் இருக்கும் அருவிகளில் குளித்து செல்வார்கள். மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, ஐந்தருவி, செண்பக அருவி ஆகியவை முக்கிய அருவிகளாகும். இங்குள்ள அருவிகளில் வரும் தண்ணீர் பொதிகை மலையில் இருக்கும் பல்வேறு மூலிகை செடிகளை கடந்து வருவதால், தண்ணீர் மூலிகை குணங்கள் நிறைந்தது என நம்பம்படுகிறது. 


ஜுன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக  கடந்த வாரம் தென்காசி மாவட்டம் குற்றலாத்தில் இருக்கும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் நேற்றைய முன் தினம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. மதியத்திற்கு பின் மெயின் அருவை தவிர பிற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்றைய தினம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.


ஆனால் தற்போது சீசன் களைக்கட்டி உள்ளதால் குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, சென்பக அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால ஏராளமான மக்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் நேற்றைய தினம் போலவே இன்றும் கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


சென்னையிலிருந்து குற்றாலம் செல்ல விரும்புவோர் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்றவை தினசரி ரயில்களாக இயக்கப்படுகின்றன. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு பயணம் மேற்கொள்ளலாம். 


Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?


Pakistan Spy : காதல் நாடகமாடிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.. ரகசிய தகவல்களை பகிர்ந்த பியூன்..நடந்தது என்ன?