1. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மது வாங்குவதற்காக வீட்டின் சுவர் ஏறி குதித்து கேஸ் சிலிண்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.92 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
3. நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் வங்கியின் பக்கவாட்டு சுவரை உடைத்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5. அரசு நிலம் அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய தாசில்தாரின் முன் ஜாமின் மனுவை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
6. "தி.மு.கவை உதயநிதிதான் நிர்வகிக்க போகிறார். இன்னும் 2 மாதங்களில் உதயநிதி அமைச்சராக போகிறார்.
நேரு, இந்திரா காந்தி முதல் ஓபிஎஸ் வரை வாரிசு அரசியல் இருக்கிறது" என மதுரையில் தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
7. "ஊழல்வாதிகளுக்கு மீண்டும் வாக்களித்தால் மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" - என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
8. சலூன் கடையில் தீண்டாமை பாகுபாடு பின்பற்றப்ப டுவதாக தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
9. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செங்குத்து பாறையில் சுமார் 1,500 அடி பள்ளத்தில் விழுந்து பலியான மதுரை வாலிபரின் உடலை 8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
10. இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். பட குகளை ஏலம் விடுவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டத்தை நேற்று துவங்கினர். நாளை ரயில் மறியலில் ஈடு பட உள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election | ”உள்ளாட்சித் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்” - பி.மூர்த்தி