1. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியில் காதல் பிரச்னையில் காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

2. மதுரை மேலூர் பதினெட்டான் குடியில் எஸ்.பி பாஸ்கரனின் தனிப்படை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

 

3. தமிழகத்தின் முதல் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 5 ஆவது அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நேற்று முதல் துவங்கியது.



 

4. செம்பட்டி அருகே எஸ். பாறைப்பட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த 3 வீரக்கற்கள் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

5. விருதுநகர் அருகே உள்ள மீச லூரைச் சேர்ந்த முதியவர் சின்னராஜா தனது 103வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 



 

6. தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்று மதுரையில் மார்க்சிஸ்ட்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

 

7. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக் கோயிலில் தைப்பூச திரு விழாவையொட்டி 300 கிலோ பூக்கள் கொண்டு எடப்பாடி பக்தர்கள் மலர் வழிபாடு செய்தனர்.

 

8. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சியில் நடந்த தணிக்கை யின்போது பல லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொ டர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண் டும் என மாவட்ட கலெக்டர் விசாகன் உத்திரவிட் டுள்ளார்.




 

9. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  592 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87118-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 81011  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 80333-ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1 நபர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1206 இருக்கிறது. இந்நிலையில் 4901 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கோவையில் தேவாலய சிலை உடைக்கப்பட்ட வழக்கில் இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது