• உலக முதலீட்டாளர் மாநாடு - மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி - முதலமைச்சர்


 சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “ உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி, ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது. நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். ” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • போக்குவரத்துறை போராட்டத்திற்கு மத்தியில் இயக்கப்படும் பேருந்துகள்; தமிழ்நாடு முழுவதும் என்ன நிலை?


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் காலை முதல் 2,098 எம்.டி.சி பேருந்துகள் மாநகராட்சி முழுவதும் இயக்கப்பட்டுவருவதாக கோட்ட மேலாளர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 700 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். மேலும் படிக்க..



  • நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு..


பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில், வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் படிக்க..



  • தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி


கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலை போன்றே, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் சேர்ந்து INDIA என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது. மேலும் படிக்க..



  • ஜனநாயகமா அப்படின்னா என்ன? மக்கள் பிரதிநிதிகள் இன்றி தவிக்கப்போகும் ஜம்மு காஷ்மீர்


பயங்கரவாதம், சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த பிரச்னை உருவாகியுள்ளது. வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பிரச்னைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு பக்கம் பயங்கரவாதிகள் என்றால் மறுபக்கம் ராணுவம் தங்களை அடக்குவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.  மேலும் படிக்க..