இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!


Vijayalakshmi  Video: நீங்க காப்பாத்துனுங்களா, என் வாழ்க்கையை சீரழிச்சிங்க என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நீங்கள் விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி, அந்த பெண்ணோட வாழ்க்கையை 14 வருடமா சீரழித்து, தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமா, அநியாயமா கர்நாடகாவுக்குள் போட்டீங்களே, அதுதான் உலகுக்கே தெரிந்த விசயமாச்சே, 2008 ஆம் ஆண்டு, உங்க அலுவலகத்திற்கு , எங்க அக்கா குழந்தையை கடத்திட்டாங்கனு வந்து நின்னோமே , அப்ப என்ன பன்னுனிங்க.! நீங்க காப்பாத்துனிங்களா, அதே அலுவலகத்தில் வைத்து , என வாழ்க்கையை சீரழிச்சிங்க , மறந்துட்டீங்களா என விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார்.


TVK' Party Conference : “தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ராகுல், சந்திரபாபு நாயுடு?” விஜயின் பலே திட்டம்..!


வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. தமிழக அரசியல் களமே பெரிதும் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் யார் யார் பங்கேற்க போகின்றார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.


மீண்டும்  திறக்கப்பட்ட கோவை குற்றாலம்..! உற்சாகத்தில் மக்கள்


கடந்த இரண்டு மாதங்களாக  வெள்ளப்பெருக்கு காரணமாக  மூடப்பட்டிருந்த நிலையில்,  கோவை குற்றாலம் இன்று மீண்டும்  திறக்கப்பட்டது.


திருச்சி விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு  மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு  மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.


பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!


பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற துளசிமதி மற்றும் மனிசா ஆகிய  தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.


மக்களே உஷார்... தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு, 4 பேர் இறப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11,000 மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் இறந்துள்ளனர். மேலும் காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.


Mettur Dam: ”மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து” கவலையில் விவசாயிகள்..


மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19,199 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 22,601 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,530 கன அடியாக குறைந்துள்ளது.


கார் பந்தயம் , பேனா சிலை, நாணய வெளியீடு என பணம் வீண்- ஓ.பி.எஸ்


தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் வழங்க தி.மு. க அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


குறைதீர் நாளில் குவிந்த மனுக்கள்... தஞ்சை கலெக்டர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் 648 மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


சென்னையில் இன்று மின் தடை! எங்கெல்லாம் தெரியுமா? லிஸ்ட்டில் உங்க ஏரியா இருக்கா?


சென்னையில் அம்பத்தூர் , போரூர் , ஆர்.ஏ புரம் , கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் மின்தடை 


சென்னையில் ( 03.09.2024 ) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணியாளர்கள் பாதுகாப்பு கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு , மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.