சென்னையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தொடங்கிய மழையானது, காலை 3 மணிவரை பெய்தது. காற்று - இடியுடன் மழை பெய்தது. இன்று காலை நேரத்திலும் தூரல் மழையானது பெய்வதை பார்க்க முடிகிறது. 


இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து , வானிலை நிலையம் தெரிவித்திருப்பதாவது “ இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . 


11 மாவட்டங்கள்:


 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை மற்றும் நீலகிரி  ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






இந்நிலையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


சென்னை: 


சென்னையில் கடந்த இரு தினங்களாக , சற்று மேகமூட்டத்துடன் வானிலை நிலவிய நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் , திடீரென மழையானது பெய்தது. இடி மற்றும் மின்னலுடன் மழையானது பெய்தது. மேலும், மழையானது அதிகாலை 3 மணி வரை பெய்தது. மேலும், தற்போதும் அண்ணா சாலை, மெரினா , அண்ணா நகர் உள்ளிட்ட சில இடங்களிலும் சாரல் மழையானது பெய்து வருகிறது.