முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை


தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்..!


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி (டிச. 25, 8AM) நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு



சற்றே குறைந்த தங்கம் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் விலை 7 ஆயிரத்து 90 ரூபாயாக உள்ளது.


பாம்பன் பாலத்தில் ஆய்வு


ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு. செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ஆய்வு மேற்கொண்டார்! 3 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று பாலம் அமைப்புப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ளன.


நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என 39 உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இதில் உறுப்பினர்களுக்கு மசோதா தொடர்பான சட்டப்பூர்வ விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன.


பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்


பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் நேற்று காலமானார். 90 வயதான அவர் நீண்ட நாட்கள் வயது மூப்பால் ஏற்படக் கூடிய நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்தியில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இவருக்கு, மத்திய அரசு ஏற்கனவே பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. 


இன்று அல்லு அர்ஜுனிடம் விசாரணை


புஷ்பா 2 திரைப்படம் வெளியான திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் சென்றதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்க்ல் ஏற்கனவே கைதாகி ஜாமினில் விடுதலை ஆகியுள்ள அல்லு அர்ஜுனுக்கு, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐதராபாத் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இஸ்ரேல் எச்சரிக்கை


கடந்த ஜுன் மாதம் ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையின் தலைவர்களின் தலைகளும் துண்டிக்கப்படும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.


நலமுடன் உள்ளார் ரோகித்


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இடது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது குணமடைந்ததாக தகவல். மெல்போர்னில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. வினோத் காம்ப்ளி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார், அவரின் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல்