CM Stalin PMK: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து, #ஸ்டாலின்துரோகம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.


முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்:


அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றின் மீதான விசாரணையின் முடிவில், “சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



உச்சநீதிமன்றம் தீர்ப்பு


இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணயின் முடிவில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆன பின்னரும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பதாக கூறி, #ஸ்டாலின்துரோகம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.


ட்ரெண்டாகும் #ஸ்டாலின்துரோகம்