முதல்வர் நெகிழ்ச்சி:
தமிழ்நாடு “மாணவிகள் என்னை அப்பா.. அப்பா.. என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.” முதல்வர் ஸ்டாலிம் நெகிழ்ச்சி
ஆளுநரின் உள்நோக்கம்:
அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டார் என்றும் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார்.தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கத் திட்டம்.
திமுக வேட்பாளர் அறிவிப்பு:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிப்பு. திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ட்ரம்ப் விடுவிப்பு:
ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு. வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், குற்றசாட்டுகளுக்கான தன்ண்டனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்! கடந்த 2016ல், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் அளித்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், ட்ரம்ப் கடந்த ஆண்டு மே மாதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம்:
அகமதாபாத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில், குஜராத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல். கூச் பெஹர் டிராபியில் கடைசியாக தமிழ்நாடு 1901-02-ம் ஆண்டு உத்தரபிரதேச அணியுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது!
1.87 லட்சம் பேர் பயணம்:
பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று (ஜன.10) ஒரே நாளில் 1,87,330 பேர் அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு வருந்துகள் சேர்த்து மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கம்.
அகழாய்வில் வளையல்கள் கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடக்கும் 3ஆம் கட்ட அகழாய்வில் வளையல்கள் கண்டெடுப்பு. சங்கு வளையல்கள், பெரிய கண்ணாடி மணி உள்ளிட்டவை கண்டெடுப்பு.
பொங்கல் விடுமுறை
பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு. விடுமுறையை ஈடுசெய்ய வரும் பிப்ரவரி 1 மற்றும் 8ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்றும் அறிவிப்பு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு! 151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ₹85 ஊக்கத்தொகையாக வழங்க ஆணை.