தமிழ்நாடு:  



  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் - வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை 


  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு - கூட்டணி நலன் கருதி வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்-க்கு நன்றி என அண்ணாமலை அறிக்கை



  •  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார் 

  • கொரோனா காலத்தில் குடிமைப்பணி தேர்வை எழுத இயலாதவர்களுக்கு வயது தளர்வளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை 

  • 25% ஈரப்பதம் நெல் கொள்முதல் தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு - பிப்ரவரி 13 ஆம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் 

  • தெப்பத்தேர் பவனியுடன் பழனியில் தைப்பூச திருவிழா நிறைவு - கடைசி நாளில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் தரிசனம் 

  • ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிப்பு - 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதால் கண்களை கட்டி போராட முடிவு 

  • நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உலா வரும் 4 புலிகள் - பழங்குடியின பெண்ணை கொன்ற புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறல் 

  • விக்டோரியா கௌரி உட்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு 


இந்தியா:



  • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு இந்தியா உதவிக்கரம் - 4 விமானங்களில் மருந்து, நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 

  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதானி பெயரே ஒலிப்பதாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேச்சு - பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் உலக பணக்காரர் பட்டியலில் அதானி 2வது இடம் பிடித்ததாக குற்றச்சாட்டு 

  • பெங்களூருவில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் விமான கண்காட்சி - இன்று முதல் 17 ஆம் தேதி வரை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களின் நேரம் மாற்றம்

  • திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித தரிசன சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு 


உலகம்:



  • துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

  • சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் குப்பைகளை சீனாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு - உளவு பார்த்து திரட்டிய தகவலை அறிய பலூனின் உதிரிபாகங்களை ஆய்வு செய்ய திட்டம் 

  • உலகளவில் தொடரும் ஊழியர்கள் பணி நீக்கம் - ஜூம் நிறுவனத்தில் 1300 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் சக ஊழியர்கள் அதிர்ச்சி 

  • மறைந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல் ராணுவ மரியாதையுடன் கராச்சியில் அடக்கம் 

  • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம் - துருக்கி அரசு அறிவிப்பு 


விளையாட்டு:



  • மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - பிப்ரவரி 13 ஆம் தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என அறிவிப்பு 

  • தேசிய டேபிள் டென்னில் போட்டித் தொடர் சென்னையில் இன்று தொடக்கம் - 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு 

  • ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், முகமது சிராஜ் தேர்வு