தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், வானிலை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் உள்ள அடுக்குகளில் கீழ் அடுக்கும் மேல் அடுக்கும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 


இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அடுத்த 4 நாட்களுக்கு, ( வரும் மார்ச் 24 வரை ) தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.




கடந்த வாரம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. 


இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் குளிர்ந்துள்ளன. இதனால் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கவனத்துடன் செல்லவும்:


இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




ஆகையால், மாலை நேரம் என்பதால், திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த்வர்கள், அலுவலக வேலை உள்ளிட்ட காரணங்களால வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் கவனத்துடன் வீட்டுக்கு செல்லவும். 


Also Read: TN Budget 2023: மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம்... மகிழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட மக்கள்


Also Read: TN Agri Budget 2023 : 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்...யார் யாருக்கு தெரியுமா...வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு...!