TN Weather Update: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 09.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.


10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.


11.04.2023 முதல் 13.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.






சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


பாபநாசம் (திருநெல்வேலி) 2, செங்கோட்டை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1 என்று வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெயில் தாக்கம்






கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும் வரும் நாட்களில் 2-3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 

அதனை தொடர்ந்து ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸும், திருப்பத்தூரில் 36 டிகிரி செல்சியஸும், சென்னையில் 34 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க


Pathu Thala Collection: பத்து தல பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பியதா? படுத்துவிட்டதா? இதுதான் கலெக்‌ஷன் நிலவரம்..!