Today weather: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் ஆறுதலடைய தொடங்கியுள்ளனர். மழை பெய்ததால் இரண்டு நாளாக குளிர் காற்றும் வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் உயர்வு
இந்தநிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை ஒரு வழி மண்டல கீழ் எடுத்து சுழற்சி நடைபெற்று வருகிறது.
இதேபோன்று குமரிக்கடல் பகுதியில் மேல், ஒரு வளிமண்டல மேலெடுத்து சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகின்ற மார்ச் 17ஆம் தேதி வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அறிவிப்பு என்ன?
தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை முன்னறிவிப்பு என்ன ?
சென்னையில் பெரும்பாலம் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.