தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை மற்றும் சென்னையின் வானிலை குறித்த தகவலை காண்போம். 

தமிழ்நாட்டின் நாளை வானிலை:

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை , நாளை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மார்ச் 16 :

தமிழகத்தில்  மார்ச் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ,பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Also Read: முதல்வர் ஸ்டாலின் ருத்ரதாண்டவம் ”தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா” உயிரே போனாலும்...

மார்ச் 17 மற்றும் மார்ச் 18:

தமிழகத்தில் மார்ச் 17 முதல மார்ச் 18  ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னை நாளை வானிலை

சென்னையில் நாளைய வானிலையானது வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.