மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அச்சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சிறுமிக்கு தருமபுரி எம்பி. டாக்டர் செந்தில் குமார் அங்குச் சென்று நிதியுதவி அளித்துள்ளார். 


அவர் செய்த உதவி தொடர்பாக இந்தி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை தருமபுரி எம்பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


 






முன்னதாக அந்தச் சிறுமியின் நிலை குறித்து சமூக வலைதளம் மூலமாக தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் அந்தச் சிறுமியின் சிகிச்சைக்கு உதவி செய்ய இவர் முடிவு செய்துள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தின் இந்தூருக்கு சென்று அச்சிறுமியின் குடும்பத்திடம் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு இருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 


 


அப்போது,”இந்தச் சிறுமியை அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. மேலும் அச்சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள் என்பதால் சிகிச்சை பணம் கட்ட முடியவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். இதன்காரணமாக அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு நேரில் வந்தேன். 


அவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு என்னால் முடிந்த நிதியுதவியை அளிக்கிறேன். தேவைப்பட்டால் அவர்களை சிகிச்சைக்காக டெல்லி அல்லது தமிழ்நாடு வேண்டும் என்றால் அழைத்து செல்லவும் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த மார்ச் 11ஆம் தேதி பக்கத்து வீடு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு அச்சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுமிக்கு ஏற்கெனவே மரபியல் பிரச்னை இருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண