TN Rain Update: சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
சென்னையில் கனமழை:
சென்னையில் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான சூழலே நிலவ் வருகிறது. இந்நிலையில் நேற்றைய காலைப்பொழுதில் அவ்வப்போது லேசான தூரல் விழுந்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணியை தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, சூளைமேடு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் தாழ்வானை சாலைகளில் மழைநீர் தேங்கியது. மற்றும் காலை நேரம் மிகுந்த குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
19-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-01-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22-01-2025 முதல் 24-01-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
19-01-2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
19-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 15 முதல் மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மினவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.