கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான காவலரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் சென்றார்.



கரூர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் கைதான காவலருக்கு மருத்துவ பரிசோதனை


கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவியின் தாய் , கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர்  இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.




இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான காவலரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறை வாகனம் மூலம்அழைத்துச் சென்றனர் மேலும் அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். குறிப்பாக இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.