தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இரவு 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. எண்ணூர், மணலி, பெரம்பூர், வியாசர்பாடி, திருவிக நகர, கொளத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதேபோல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களிலும் பெய்து வரும் மழையால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வோர், வீட்டில் இருந்து நைட் ஷிப்ட் பணிக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் அதிகபட்ச மழை 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 10 ம்ணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. திருப்பத்தூரில் 4 செ.மீ., பூவிருந்தவல்லி, செய்யாறில் தலா 3 செ.மீ., மழையும் பதிவானது.