பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தவாக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரிய திரை, சின்னத்திரை பிரபலங்கள் தவிர்த்து சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதலில் தொடங்கியவுடன் தொடக்கத்தில் சிலர் ரசித்து பார்த்து ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு, வந்த பல சீசன்களை பார்த்து பார்வையாளர்கள் எரிச்சலடைந்தனர். காரணம் முகம் சுழிக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் நடந்து கொள்வதால், அந்நிகழ்ச்சிக்கு பலர் தெரிவித்து வருகின்றனர். தொடக்கத்தில் வந்த சீசன்களில் அதில் பங்கேற்ற பிரபலமான பங்கேற்பாளர்கள் தங்களின் வாழ்கை அனுபவம், தாங்கள் கடந்து வந்த பாதை, சாதித்த சறுக்கிய அனுபவங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக கூறினர். இது பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. ஆனால், கடந்த மூன்று, நான்கு சீசன்களில் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருப்பதில்லை, அதில் வரும் கெட்டவார்த்தை, ஆபாச பேச்சு போன்றவை இருப்பதால், முதல் சீசனில் இருந்து பார்த்து வந்தவர்கள், தற்போது பார்ப்பாதில்லை. 

Continues below advertisement

சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஒவ்வெரு வருடன் பிக்பாஸ் தொடங்கிய சில நாட்களில் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்ப அமைப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக்கோரி தவாக கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் வரும் 9ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.