காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை கனமழை பெய்யும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் நேரத்தில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் பல முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக வாலாஜாபாத் பகுதியில் 4.2 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 3.24 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 2.28 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. அதேபோன்று உத்திரமேரூர் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காடு கோட்டை, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

7 மணி வரை மழை முன்னெச்சரிக்கை 

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை கனமழை பெய்யும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் பாதிப்பு 

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.