தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ( இரவு 7 மணி வரை )  30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


30 மாவட்டங்களில் மழை:


நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம் , நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘


pic.twitter.com/bzxh7cveA5


— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 25, 2024


ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக இருக்கவும். வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் நபர்கள், பாதுகாப்பாக செல்லுங்கள். தேவையின்றி , வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.